Skip to main content

பாண்டியருக்கு மீன் கொடி வந்த கதை

சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால், தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால், மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து, தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான்.”

Comments

Popular posts from this blog

திராட்சை வளர்ப்பது எப்படி ,பராமரிப்பு,பாதுகாப்பு பற்றிய தகவல்கள்

தப்லீக் ஜமாத்தின் டெல்லி கூட்டம் - சர்ச்சை என்ன..? | Tablighi Jamaat | D...