Skip to main content

Posts

தப்லீக் ஜமாத்தின் டெல்லி கூட்டம் - சர்ச்சை என்ன..? | Tablighi Jamaat | D...

Recent posts

உங்க வீட்ல திராட்சைக்கொடி வளர்க்கணுமா? Do you want to grow grape crop in...

திராட்சை வளர்ப்பது எப்படி ,பராமரிப்பு,பாதுகாப்பு பற்றிய தகவல்கள்

பாண்டியருக்கு மீன் கொடி வந்த கதை

“ சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன் . இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன் . இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால் , தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான் . தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு , அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான் . அக்கட்டளையின்படி , குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான் . இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து , ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான் . குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால் , மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து , தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான் .”